சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி!தமிழ் மக்கள் கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பொருட்டு இன்றைய தினம் சனிக்கிழமை  சர்வ மத தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். 

முன்னதாக , யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் மாலை 2.30 மணியளவில் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நல்லை ஆதீனம்  குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சிவகுரு ஆதீனத்தின் தவத்திரு வேலன் சுவாமிகளிடமும் ஆசீர்வாதம் பெற்றனர்.

இதன் போது , தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்  நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், சட்டத்தரணி வி. மணிவண்ணன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments