இந்திய விசா அலுவலகத்தில் திருட்டு: ஐவர் கைது


கொழும்பில் உள்ள இந்திய விசா விநியோக அலுவலகத்தில் மடிக்கணினி உள்ளிட்ட இலத்திரனியல் இயந்திரங்களை திருடியமை தொடர்பில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 63 வயதான பெண்ணொருவரும் அடங்குகின்றார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறிப்பிட்டுள்ளார்.

No comments