13:முன்னணியும் எல்லே குணவங்ச தேரரும் எதிர்ப்பு!ரணில் விக்கிரமசிங்க மிகச்சிறந்த அறிவாளி, போதிய அனுபவத்தை கொண்டவர் அவர் முட்டாள் இல்லை . அதனாலேயே 13வது திருத்தத்தை உண்மையான தமிழன் எதிர்ப்பான் என்று நன்கு அறிந்து வைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

“சிங்கள பௌத்த பேரினவாத தரப்புக்கள் 13வது திருத்தத்தை எதிர்பதற்கு பிரதான காரணம் அவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார்கள் 13வது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் 13வது திருத்தத்தை எதிர்க்கின்றது. 13வது திருத்தம் என்பது தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை என்பதே எமது நிலைப்பாடு அதேவேளை, நாம் 13வது திருத்தத்திற்கு எதிரானவர்கள் இல்லை.

இதேவேளை, 13வது திருத்த சட்டத்தில் எந்த அதிகாரங்களும் இல்லை என்பது விவாத்திற்கு அப்பாற்பட்ட விடயம்” என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை மீறி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்டால் அரசிற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என முன்னணி பௌத்த அமைப்புக்களது தலைவரான எல்லே குணவங்ச தேரர் எச்சரித்துள்ளார்.


No comments