துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்! 500க்கு மேற்பட்டோர் பலி


துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.

துருக்கியில் குறைந்தது 284 பேர் இறந்துள்ளனர் மற்றும் 2,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே கூறினார்.

1,718 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், பல முக்கிய நகரங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் சிரியாவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 600 பேர் காயமடைந்தனர் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய மாகாணங்களில் - 237 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.


No comments