மார்ச் 09ஆம் திகதி தேர்தல் ; வெளியானது வர்த்தமானி


உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகவும் , அவர்கள் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு மார்ச் 9 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments