மின் உற்பத்தி திட்டத்திற்கு அதானி குழுமத்துக்கு அனுமதி


மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது.

இதனிடையே, எந்த ஆய்வுகளும் அனுமதிப்பத்திரங்களும் இன்றி முதலீட்டு சபையும் இந்தியாவின் அதானி குழுமமும் நேற்று மாலை உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒப்பந்தத்தின் படி மன்னாரில் 250 மெகா வோட்ஸ், பூநகரியில் 100 மெகா வோட்ஸ் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் 44. 2 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில்அமையவுள்ளன.

இது இரு ஆண்டுகளில் நிறைவுத்தப்படும் எனவும் அத்துடன் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை திட்டங்களில் 50 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு அதானி கிறீன் எனர்ஜிக்கு அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த மின் உற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் பெறப்படவில்லை.

இதனால், இது சட்டவிரோதமான ஒப்பந்தம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments