நல்லூர் பின் வீதியில் வாள்வெட்டு சம்பவம் இருவர் காயம்!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment