கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது கைக்குண்டு வீச முற்பட்டவர் சுட்டுக்கொலை!


பொலிஸார் மீது கைக்குண்டை வீச முற்பட்டவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க, மடவளை பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த பகுதியில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்த முற்பட்டனர்.

 அதன் போது, நபர் ஒருவர் பொலிஸார் மீது கைக்குண்டை வீச முற்பட்ட போது,  பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments