தமிழினப் படுகொலை ஆணவ நூல் சீமானிடம் கையளிப்பு

அண்ணன் சீமான் அவர்களிடம் ஆவண நூல் கையளிக்கப்பட்டது.

இன்று 23.01.2023 நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து “தமிழினப் படுகொலை ” நூல் கையளிக்கப்பட்டது.

தமிழீழ மக்களின் சார்பில் அனைத்துலக தமிழர் செயலகம் தொகுத்துள்ள ‘தமிழினப்படுகொலை’ ஆவண நூலை அண்ணன் சீமான் அவர்களிடம் கையளித்த ஆவணப் பேரேட்டின் தொகுப்பாசிரியர் செம்பியன் அதன் உள்ளடக்கங்களை விளக்கப்படுத்தினார். சென்னையில் வரும் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆவண நூலின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டுமென அவரிடம் வெளியீட்டு குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது

இச்சந்திப்பின்போது, புலவர். இரத்தின வேலன் ஐயா, வெங்கடேசன், கோபி சிவந்தன், தமிழுணர்வாளர் த.மணிவண்ணன், அனைத்துலக தமிழர் செயலகத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.No comments