கொழும்பு போர்ட் சிட்டியைப் பார்வையிட்ட முன்னாள் பிரதமர் கமரூன்


இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு போர்ட் சிட்டிக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு போட்டிசிட்டியின் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிகுலர் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் நிறுவன விவகாரங்களிற்கான இயக்குநர் விந்தியா வீரசேகர சிஎச்ஈசி போட் சிட்டி கொழும்பின் முகாமைத்துவ பணிப்பாளர் யாங் லு ஆகியோரை சந்தித்த டேவிட் கமரூன் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் திட்டத்தின் தனியார் கூட்டான்மை மற்றும் பங்களிப்பு குறித்து கேட்டறிந்தார். இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுக வீரக்கோனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

இதேநேரம் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துள்ளார்.

கடந்த 01 திங்கட்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இருவரும் சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கேமரூன் தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்துள்ளார்.

ஒரு நட்பு கலந்துரையாடலின் போது, ​​திரு. கேமரூன் ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார், என்றுஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
No comments