வேலன் சுவாமிகள் சார்பில் சுமந்திரன்


பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் மன்றில் முன்னிலையாகவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்ந வேளை, எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகளை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், வேலன் சுவாமிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் மன்றில் முன்னிலையாகவுள்ளார்.

No comments