யாழில். கசிப்புடன் பெண் கைது!


யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை சோதனையிட்ட போது, வீட்டில் இருந்து 40 லீட்டர் கோடா 15 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்ச பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றை மீட்டனர்.

அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments