மிரிஹனவில் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது!


செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் மிரிஹனவில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் அடிப்படையில், மிரிஹான பொலிஸார் 40 வயதுடைய குறித்த நபரை வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

சோதனையின் போது மடிக்கணினி பறிமுதல் செய்த பொலிஸார் குறித்த நபர் ஏதேனும் மோசடி அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜையை இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments