கோட்டாவிற்கு எதிராக சதியாம்!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், அப்போது அமைச்சர்கள் சிலரும் இதில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன, அதனை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும், தமக்கு எதிராக சதித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதையும், அதனால் தான் தான் வெளியேற வேண்டியிருந்தது என்பதனை கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொள்ளத் தயங்குகின்றார்.

மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் அளவே தற்போதும் இறக்குமதி செய்யப்படுவதாகவும் ஆனால் தற்போது எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments