கோமகன் உட்பட பலருக்கு வழக்கு!



இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உட்பட மேலும் சிலருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இன்றைய தினம் யாழ்.நீதிமனிற்ல் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்காக வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னிலையாகியிருந்தார்.

கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ் நீதிமன்ற நீதவான்  முன்னிலையில்; இன்று இடம் பெற்றிருந்தது.

வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி  அதேவேளை,  போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் சோமபாலன், வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்க செயலாளர் ஜெனிற்றா ஆகியோரை பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.

அத்துடன் மன்றில் முன்னிலையாகிய இருவரையும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் உள்ளிட்ட பலரது பெயர்கள் நீதிமன்றினில் காவல்துறையால் பிரேரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments