தம்பியின் கத்திக் குத்தில் அண்ணன் உயிரிழப்பு!


தம்பியின் கத்திக் குத்துக்கு இலக்கான அண்ணன் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி தரும புரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சகோதரர்களிற்கிடையில் தொலை பேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார்.

கல்லாறு பகுதியை சேர்ந்த தருமராசா தவசீலன் (வயது 37) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக  பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments