பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முடிவு; நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றது.

அதன்போது,  காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்திய கடிதம் முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் வருகை தந்து குறித்த காணி உரிமையாளர்கள் பதிவு செய்தனர்.

குறித்த காணிகள் கிராம சேவையாளர் பிரிவுகளான J 246 , J256, J240 இற்குள் அடங்குகின்றன.  காணி உரிமையாளர்களுக்கான அறிவித்தல் கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. 

காணிகள் தொடர்பில் தகவலை அறிய விரும்புவோர், பிரதேச செயகத்துக்கு வருகை தந்து அங்கு காட்சிப்படுத்தியுள்ள வரைபடத்தில் காணியை இனங்காண முடியும் அதில் இலக்கம் இடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments