யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு; 6 ஆம் திகதி விசாரணை!


யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் வ. பார்தீபனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

No comments