சுதந்திரம் இல்லை ஏன் சுதந்திர தினம் ?

 


நாட்டில் சுதந்திரம் இல்லை ஏன்  சுதந்திர தினத்தை  கொண்டாடப் போகின்றார்கள் என தெரியவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பினார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

 கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு ஜனநாயகரீதியில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்போது சிறையில் அடைத்திருக்கிறீர்கள்  பல இளைஞர்கள் யுவதிகள் சிறையில் வாடுகின்றார்கள்.

அதேபோல நாட்டில் தற்பொழுது சுதந்திரம் இல்லை போராடுவதற்கு ஜனநாயக உரிமை இல்லை போராட்டக்காரர்கள் கொடூரமாக அடக்கப்படுகின்றார்கள் அவ்வாறான  நிலையில்  சுதந்திர தினம் தேவைதானா?  முதலில் அவர்களுக்கு விடுதலையை கொடுங்கள் அதன் பிறகு நீங்கள் சுதந்திரத்திர தினத்தை  கொண்டாடலாம்.

No comments