வேட்புமனுக்கள் 18முதல் 21 வரை!இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான  ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல் மார்ச் 10 க்கு முன்னதாக நடைபெற வேண்டும்.

அதன்படி மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் பங்கெடுக்கப்போவதில்லையென பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன.

தமக்கு கூட்டத்தில் பங்குபற்றும் எண்ணம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்களிப்பின் போது பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தோற்றகடிக்கப்பட்டதை அடுத்து,முதல்வராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்தார். மாநகர சபைக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வது தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. புதிய முதல்வர் தேர்வு இடம்பெற்றால், அதற்கு எதிராக வழக்கத் தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன், தெரிவித்துள்ளார்.


No comments