ரெஜினோல்ட் குரே காலமானார்!

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் , முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில்  காலமானார்.

 வாத்துவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு  இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் போது  திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

அதனை அடுத்து பாணந்துறை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

No comments