சனத் சங்கக்கடை தேர்தலில் கூட வெல்லவில்லை!நேற்று (17) நடைபெற்ற ஆராச்சிக்கட்டுவ கூட்டுறவுத் தேர்தலில் குழு உறுப்பினர் வேட்பாளராக போட்டியிட்ட நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார். 

அந்த பிராந்தியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 09 ஆகும். தேசிய மக்கள் படையில் போட்டியிட்ட 09 வேட்பாளர்களில் 06 உறுப்பினர்கள் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஏனைய மூவரும் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். , அந்த மூவரில், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவு செய்யப்படவில்லை போட்டியிட்ட 19 குழு உறுப்பினர்களில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 11வது இடத்தைப் பெற்றுள்ளார்.

No comments