இலங்கை தேர்தலும் உலக அதிசயமே இலங்கையில் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பணம் அச்சிடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு 2,500 பில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டபோதிலும், அன்றாட செலவுகளுக்காக அது பயன்படுத்தப்படவில்லை என்றும்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

No comments