விடுதலை எதிர்பார்த்திருக்க மரணதண்டனையாம்?மேலுமொரு தொகுதி அரசியல் கைதிகள் எந்நேரமும் விடுவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 19வருடங்களின் பின்னராக மற்றுமெர்ரு பெண் அரசியல் கைதிக்கு மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது இலங்கை நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.இத்தாக்குதலில் இரு காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை மரணதண்டனை விதித்துள்ளது.

குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட இவருக்கு மேல் நீதிமன்றத்தினால் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொய்க்குற்றச்சாட்டுக்களில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி தொடர்ச்சியான அழுத்தம் இலங்கை அரசிற்கு பிரயோகிக்கப்பட்டுவருகின்ற நிலையில் மற்றொரு அரசியல் கைதிக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments