முதலில் நாடாளுமன்ற தேர்தலே வேண்டும்! மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலே இப்போது அவசியம் என  ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களால் நாட்டுக்கு எந்தவிதமான சேவைகளும் ஆற்றப்படுவதில்லை என்பதால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேண்டாமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தேர்தல் அல்ல உணவே இப்போது அவசியம். IMF உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் ஏன் இலங்கைக்கு உதவுவதில்லை? சட்டரீதியாக மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் ஒன்று அமைக்கப்படாமையே இதற்குக் காரணம். எனவே, மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலே இப்போது அவசியம் எனவும் தெரிவித்தார்.

No comments