முதலில் பலாலி ஆமிக்கு வந்தனம் !ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச வ விமான நிலையம்; ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி சற்று முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார், 

இலங்கை ஜனாதிபதியினை முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் வடக்கு மாகாண ஆளுநர் , கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலையில் பலாலி படை தலைமையகத்தில் முப்படையினரை சந்திந்துள்ளார்.

தொடர்ந்து ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளதோடு யாழ் ஆயர்,இந்து மத தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

மாலை நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் பொங்கல் நிகழ்விலும் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறும் பொங்கல் விழாவில் சிறப்புரை ஆற்றவுள்ளதோடு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும்;விசேட கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.


No comments