புத்தாண்டிலும் போராட்டம்!புதுவருட தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

2142வது நாளாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைத் தேடும் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில், ஐ.நா கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பை நடாத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

No comments