வித்தியாதரனை முந்துவது யார்?

 


யாழ். மாநகர சபையின் புதிய தேர்தலிற்கான தமிழரசுக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் பிரச்சாரங்களில் ஈடுபட ஏதுவாக ஊடகப்பணியிலிருந்து விலகியிருக்கவுள்ளதாக வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாளை மறுதினம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்திருந்தது.

இந்நிலையில் நாளை (18) புதன்கிழமை காலை மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சி சார்பில் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவியதால் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில இன்று(17) மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது.

எனினும் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சொலமன் சிறில் ,இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்டதால் கூட்டம் இணக்கமின்றி முடிந்திருந்தது.


No comments