மரியாதையும் போய் சோத்துப்பார்சலும் போன கதை!



இந்திய சுதந்திர கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களிற்கு பொலித்தீன் பையில் சாப்பாட்டு பார்சலும் தண்ணிப்போத்தலும் கையில்  வாங்கிச்செல்ல யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் ஏற்பாடு செய்தமை சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இந்திய குடியரசுத்தின விழாவுக்கு அழைப்பிதழ் தந்திருந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்திற்கென இரவு சாப்பாட்டிற்கென வழமை போல ஒரு கும்பல் சென்றுள்ளது.

ஆனாலும் விருந்து வைக்காமல் பொலித்தீன் பையில் சாப்பாட்டு பார்சலும் தண்ணிப்போத்தலும் கையில்   வாங்கிச்செல்ல யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் ஏற்பாடு செய்ய அதனை பிழை என சொல்லி திருப்பிக்கொடுத்துவிட்டு வந்து விட்டேன் எங்களுக்கும் சுயமரியாதை உண்டு. முழு யாழ்ப்பாணமே அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டது போல தோன்றியதென உணர்ச்சிவசப்பட்டுள்ளார் முன்னணி ஆதரவாளர் ஒருவர். 

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ,அரசாங்க  அதிகாரிகள் ,தவிசாளர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் ,விரிவுரையாளர்கள் ,நிறுவனங்களின் இயக்குனர்கள்  பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்கள் அனைவருக்கும் இது நிகழ்ந்தது .சாப்பாடு வழங்காமல் விட்டிருக்கலாம் நாம் இரவுச்சாப்பாட்டுக்கு வசதியற்றவரகளல்லர் புரிந்து கொள்ளுங்கள் என பொங்க தொடங்கியுள்ளனர் ஏமாற்றப்பட்டவர்கள்.

இதனிடையே இலங்கைக்கு விசுவாசம்: இலங்கை இந்திய நட்புறவு பாடல்களாம், 74ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தில் நடக்கக்கேக்க முதல் பாட்டே மெனிக்கே மகே கித்தேனு புரியாத பாசை பாடுறாங்க! ரெண்டாவது பாட்டு வந்தே மாதரம்னு ஹிந்தில பாடுராங்க தமிழ் பாட்ட காணல! தமிழ் மறந்துட்டு போல என்ன மற்றொரு ஊடகவியலாளர் சீற்றமடைந்துள்ளார்.


No comments