கையும் வீடும் காசு கட்டின!நடைபெறுமா இல்லையாவென்ற சந்தேகத்தின் மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை செலுத்தியுள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளுக்கும்  தேர்தலில் போட்டியிட ஏதுவாக கட்டு பணம் செலுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே சிறீலங்கா சுதந்திரக் கட்சியும்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் திங்கட்கிழமை செலுத்தியுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறீPலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ளது என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஈபிடிபி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments