பொலிஸார் துரத்தியதில் தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!


பொலிஸாரிடம் இருந்து தப்பியோட முயற்சித்த இளைஞன் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார். 

கம்பளை பொத்தலப்பிட்டிய பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனை கைது செய்வதற்காக வீட்டிற்கு சென்ற வேளை பொலிசாரின் கைது நடவடிக்கையில் இருந்து இளைஞன் தப்பியோடியுள்ளார். 

தப்பியோடிய இளைஞனை பொலிஸார் துரத்தி சென்ற வேளை உயரமான கட்டடம் ஒன்றில் ஏறி தப்பியோட முற்பட்ட வேளை , அக் கட்டடத்தில் இருந்து இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments