புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சியில் இளைஞன் படுகொலை!


கிளிநொச்சியில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் தவக்குமார் சுரேஷ் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

இளைஞனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் , நித்திரையில் இருந்த இளைஞனை தாக்கி , கூரிய ஆயுதத்தால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சத்தம் கேட்டு ஒன்று கூடிய அயலவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞனை மீட்டு கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

இளைஞனின் சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

புத்தாண்டு தினமான இன்றைய தினம் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments