யாழில் இராணுவ வீரருக்கு 21 வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இறுதி மரியாதை!


 யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலம் அவர்களின் பூதவுடல் இன்றைய தினம் வியாழக்கிழமை 21 வேட்டுக்கள் முழங்க தீயில் சங்கமானது.

 கடந்த 1958ஆம் ஆண்டு இராணுவ சேவையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். 

இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக கடந்த 23ஆம் திகதி கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தார்.

 இறுதிச் சடங்குகள், இன்றைய தினம் வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, கீரிமலை இந்து மயானத்தில் 21 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க இராணுவ மரியாதையுடன் அவரது உடல் தீயில் சங்கமமானது.

  இறுதி நிகழ்வில் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் போத்தொட்ட, இராணுவ படைப்பிரிவு அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.No comments