அனுராதபுரத்தில் வீடொன்றில் தீ ; தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு


அநுராதபுரம் – அலையாபத்து – மாங்கடவளையில் வீடொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாயொருவரும், இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் ஐந்து வயது சிறுவனும், பத்து வயது சிறுமி ஒருவரும், 30 வயதுடைய தாயொருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றச் சென்ற 37 வயதுடைய கணவர், தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments