கல்லுண்டாய் வாள் வெட்டு ; 22 வயதான பிரதான சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லுண்டாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த முதலாம் திகதி அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு இருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment