கைலாசாவிற்கு அமெரிக்கா அங்கீகாரம்!


கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் ‘இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்’ கையெழுத்திடும் விழா, கடந்த 11ஆம் திகதி நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் நெவார்க் நரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பேரிடர், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது, மேலும், மனநலப் பிரச்னைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பரஸ்பர உதவி சார்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

No comments