மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!


விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மருதங்கேணி பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகஸ்தர்  யோகசந்திரன் பிரகலாதன் (வயது 42) படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments