யாழில். வீதியில் சுயநினைவின்றி மீட்கப்பட்டவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக சுயநினைவின்றி காணப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். 

தென்மராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக கடந்த 15 ஆம் திகதி சுயநினைவற்ற நிலையில் விழுந்து கிடந்துள்ளார். 

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். 

No comments