உறக்கத்தில் இருந்த பேரனை அடித்து கொலை செய்த தாத்தா!


உறக்கத்தில் இருந்த தனது பேரனை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் தாத்தாவை பொலிஸார் தேடி வருகின்றனர். 

கொட்டவெஹெர கெலேகம பகுதியை சேர்ந்த நவோத் தில்ஷான் (வயது 18) எனும் இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 16ஆம் திகதி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை , இளைஞனின் தாத்தா கொட்டனால் தாக்கி படுகொலை செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாத்தா தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments