கல்லுண்டாயில் வாள் வெட்டு ; ஒருவர் படுகாயம்


 யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குறித்த நபர் , இன்றைய தினம் இரவு வீட்டின் வெளியே நின்று இருந்த வேளை முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த நபரை அயலவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதான வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments