உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: கிறஸ்மஸ் செய்தியில் போப் அழைப்பு


உக்ரைனில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க தனது வருடாந்த கிறிஸ்மஸ் உரையில்  அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

உக்ரையினில் நடைபெறும் போரின் பனிக்காற்று மனித குலத்தை தொடர்ந்து உலுக்கிக்கொண்டிருப்பதாக தனது வருத்தத்தை போப் வெளிப்படுத்தினார்.

ஆயுதங்களின் இடிமுழக்கத்தை நிறுத்தவும், இந்த அர்த்தமற்ற போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும் வல்லமை படைத்தவர்கள் மீது கடவுள் ஒளி வீசட்டும் என்று அவர் கூறினார்.

உக்ரைனில் நடந்த போர் பஞ்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. பசியுடன் இருப்பவர்களை, குறிப்பாக குழந்தைகளை நினைத்துப் பாருங்கள் என்றார்.

ஏமன், சிரியா மற்றும் ஹைட்டி உட்பட உலகின் பல பகுதிகள் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்காக பிரார்த்தனை செய்ய போப் அழைப்பு விடுத்தார்.

No comments