பொலிஸ் உத்தியோகத்தரிடம் ஹெரோயின்!இலங்கைக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியின் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று அவரிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் கண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி மத்திய சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் 2021 இல் பொலிஸில் இணைந்துக்கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments