கூட்டமைப்பிற்காக பேசும் சஜித்!



 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தான் ஒருபோதும் உடன்பாடில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வடக்கு-கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து எதிர்கட்சிகள் அரசியலமைப்பு பேரவைக்கு கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்களை நியமிக்க எதிர்ப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments