அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே போட்டி: பி-21 குண்டு வீச்சு விமானத்தை காட்சிப்படுத்தியது அமெரிக்கா!!


அமெரிக்கப் விமானப் படையினரின் முதுகெலுப்பாகக் கூறப்படும் பி-21 (B-21) குண்டு வீச்சு மூலோபாய விமானம் நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க விமானப் படை காட்சிப்படுத்தியது.

உக்ரேனில் போர் மற்றும் தைவானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மத்தியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நேரத்தில் புதிய குண்டுவீச்சு விமானங்கள் வெளியிடப்பட்டது.

இந்த விமானத்தை உற்பத்தி செய்ய $700மி (£569மி)  செலவாகியது. உலகத்தின் எப்பரப்புக்கும் அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. அத்துடன் ஆளில்லாமல் இயக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. 

அத்துடன் எதிர்பார்த்தபடி விமானத்தின் குறிப்பிட்ட விவரங்கள் இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன.

அமொிக்காவின்புதிய பி-21 குண்டு வீச்சு விமானம்

அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் கூட வானில் பி-21 ஐக் கண்டறிய போராடும் எனகட கூறப்பட்டுள்ளது.

பி-21 குண்டு வீச்சு விமானத்தின் இறக்கை அதன் முன்னேடியான பி-2 விமானத்தின் இறக்கை வடிவத்தை ஒத்தது.நீண்ட தூர மற்றும் நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறன்களைப் பயன்படுத்தி பாரம்பரிய மற்றும் அணு ஆயுதங்களை உலகம் முழுவதும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

இக்குண்டு வீச்சு விமானம் போன்று ரஷ்யாவும் சீனாவும் குண்டு வீச்சு விமானங்களை உருவாக்கி வருகின்றன. ரஷ்யாவின் அதிதிறன்கொண்ட குண்டு வீச்சு விமானமாக PAK - DA உருவாகின்றது. 

ரஷ்யாவின் PAK - DA குண்டு வீச்சு விமானம்

சீனாவும் பி-21 இணையாக எச்-20 என்ற குண்டு வீச்சு விமானத்தை உருவாக்கி வருகிறது.

சீனாவின் எச்-20 குண்டு வீச்சு விமானம்

ரஷ்ய மற்றும் சீன மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில், மேற்கு பசிபிக் பகுதியில் புதன்கிழமை கூட்டு எட்டு மணி நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டன.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த பணியை ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழக்கமான முயற்சி என்று அழைத்தது.

No comments