வடக்குக்கு உதவிகளை அள்ளி வழங்கும் சீனா!


இலங்கைக்கு கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம் என இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் சீனாத்தூதுவர் ஹூவெய் தெரிவித்தார். 

சீன மக்களின் நன்கொடையை யாழ் மாவட்ட செயலகத்தில் மக்களுக்கு வழங்கி வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை, சீனா ஆகிய இருநாடுகளும் நண்பர்கள் என்ற வகையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 

பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பு செய்வதற்கான உணவுப்பொதிகளும் எம்மால் வழங்கப்பட்டு வருகின்றது. 

மேலும் ஒன்பது ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் எரிபொருட்களை யாழ்ப்பாண விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 

அதேவேளை பத்தாயிரம் மெற்றிக்தொன் அரிசியை வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ளாம் என்றார்.

No comments