பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்!


பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கூறப்படும் குறித்த குழுவினர் பேராசிரியர் தங்கியிருந்த இல்லத்தையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பேராதனை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், காயமடைந்திருந்த பேராசிரியரை சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும் அவரது மகனை கண்டி வைத்தியசாலையிலும் அனுமதித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாணவர் குழுவொன்றுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments