கொழும்பில் தமிழ் வர்த்தகரது விமானங்கள்!

சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளமை தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது. 

சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு  குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 6 அல்லது 7 விமானங்களின் காலம் நிறைவடைகின்றமையினால், புதிதாக குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக துறைமுகங்கள் ற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று மாதங்களில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்,; விமான நிறுவனத்தின் மூலம் சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இதனிடையே சிறீPலங்கா விமான நிலையத்திற்கு சொந்தமாக எந்தவொரு விமானமும் இல்லை என தெரிவித்த அமைச்சர், அனைத்து விமானங்களும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் அவ்வாறான 24 விமானங்கள் உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் அண்மையில் ரணிலுடன் அடிக்கடி சந்திப்புக்களினை நடத்திய தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து விமானங்களை வாடகைக்கு அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த திரைப்பட துறை சார்ந்த வர்த்தகரே சிறீலங்கன் விமானசேவையினை கொள்வனவு செய்ய முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

No comments