லக்சபானாவும் விற்பனை!



இலங்கையின் வடபுலத்தை இந்திய அதானிக்கு தாரைவார்த்துள்ள நிலையில் இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்ஷபான நீர் மின் நிலையத்தை கொரிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு மின் அலகு அரசாங்கத்திடம் இருந்து பெறும் விலை மற்றும் நுகர்வோருக்கு அரசாங்கம் வழங்கும் விலையை நிர்ணயம் செய்வதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான உயர்மட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்யவிருக்கும் வெளிநாட்டு நிறுவனம் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments