உற்சாகத்துடன்(?) சந்தித்த மு.ஜனாதிபதிகள்


முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத்தின் மகனின் திருமண வைபவம் நேற்று கொழும்பு ஆடம்பர ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த விருந்தில் உயர்மட்ட அதிகாரிகள், உயர்மட்ட வர்த்தக சமூகத்தினர் , அரசியல் தலைவர்கள், என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மூன்று ஜனாதிபதிகள் கலந்துகொண்டமை இங்கு காணப்பட்ட மிகவும் விசேட நிகழ்வாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவரும் கலந்து கொண்டனர் .

இந்த மூவரும் பசில் ராஜபக்ஷவும் ஒரே மேசையில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சூப்பர் உணவுகள் வழங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது

No comments