விசாரணைக்காக அறகலய எப்.எம்?காலிமுகத்திடலில் இடம்பெற்ற ‘அரகலய’ அரச எதிர்ப்புப் போராட்டத்திற்கு சேவையாற்றிய ‘அறகலய எப்.எம்’ ஊடகத்தில் பணியாற்றிய சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான சசிக திஸாநாயக்க இன்று (20) விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) அழைக்கப்பட்டுள்ளார்.

திஸாநாயக்க செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அரகலயா எப்எம்’ தொடர்பாக தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் விசாரிக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்குப் பதிலாக நாட்டுக்காக குரல் கொடுப்பவர்களை வரவழைக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கையில் பொது நிதி வீணடிக்கப்படுகிறது என்றும் அவர்  கூறினார்

No comments